மீண்டும் ஒரு காக்க காக்க சூர்யா கௌதம் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.!

  0

  சூர்யாவின் சூரரை போற்று என்ற திரைப்படம் இணையதளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

  இந்த திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

  இதனை அடுத்து சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

  அந்தத் தகவல்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படமும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருந்தார் சூர்யா தற்போது மூன்றாவது முறையாக இன்னொரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.

  மூன்றாவது திரைப்படமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் நவரசா என்ற வெப் சீரியஸ் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

  மேலும் நவரசா வெப் சீரியஸ் தொடரின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியபோது சூர்யா அதில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டுள்ளார். என்று ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

  இந்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.