KGF யாஷ் போல் பிரமாண்ட கதாபாத்திரத்தில் சூர்யா.! மாஸ்டர் பிளான் போட்ட சிறுத்தை சிவா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. மேலும் இவர் நடிப்பில் என்.ஜி.கே, அஞ்சான், காப்பான் தானாசேர்ந்தகூட்டம், சூரரைப்போற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படத்திற்கு பிறகு சூர்யா 41 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

surya
surya

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

surya
surya

இந்த திரைபடத்தை  இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் படமான வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும்  இந்த திரைப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி பணிபுரிந்து வருகிறார் சூர்யா.

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக விசுவாசம் திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கேஜிஎப் திரைப்படத்தை போன்று இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் சிறுத்தை சிவா. ஜூலை மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment