நடிப்பு என்றால் சூர்யா : பேரையும், புகழையும் பெற்று தந்தது இந்த படம் தான்.! தற்போது கொண்டாடும் ரசிகர்கள் காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்களில் சீயான் விக்ரமுக்கு அடுத்தது சிறப்பாக தனது பயணத்தை மேற்கொண்டவர் நடிகர் சூர்யா.

இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் வேற மாதிரி இருக்கும் என்பது நாம் அனைவரும் அதில் அவரது நடிப்பு நின்று பேசும் நான் அனைவரும் அறிந்த ஒன்றே அப்படிதான் இவர் நடிப்பில் வெளியாகி தற்போது ஐந்து வருடங்கள் ஆகியும் பேசும் படமாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியான படம் 24 .

இந்த திரைப் படத்தில் ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருந்தார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நித்யாமேனன், சமந்தா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

படம் வெளிவந்து சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் சூர்யா கேரியரில் இது அவருக்கு ஒரு பேஸ்ட்டான படமாகப் பார்க்கப்படுகிறது.

அந்த அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத படமாக இது அப்போதைய காலகட்டத்தில் இருந்தது இந்த திரைப்படமும் வெளியாகி தற்போது ஐந்து வருடங்கள் ஆகிறது இதனை சூர்யா ரசிகர்கள் தற்போது #5yearsof24 ஒன்றை நிறுவி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment