நேர்கொண்ட பார்வை அஜித்தை போல் சூர்யா.! வைரலாகும் புகைப்படம்.!

அஜித் நடிப்பில் மாஸாக வெளியான திரைப்படம் தான் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து மிரட்டியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை அஜித் வழக்கறிஞராக இருந்து தட்டிக் கேட்பார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது அதிக நாள் ஓடி நல்ல விமர்சனத்தை பெற்று சாதனை படைத்தது இந்நிலையில் தல அஜித்தை போலவே பெயரிடாத ஒரு திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறாராம் ஆம் பெயரிடாத ஒரு திரைப்படத்தில் சூரிய நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்து வரும் இந்த திரைப்படம் இறுதி கட்ட பணிகளை எட்டி உள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யாவின் இந்த திரைப்படத்தை அவர் வைத்திருக்கும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க போகிறதாம்.

surya
surya

இந்நிலையில் சூர்யா வழக்கறிஞராக வேடம் அணிந்து கொண்டு வரும் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது இவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக கொடுக்க நினைத்த இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சூர்யாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Leave a Comment