ஹீரோயின் போல் ஜொலிக்கும் நடிகர் சூர்யாவின் மகள்.. அடுத்த ஜோதிகா ரெடி.! வைரலாகும் புகைப்படம்

Surya : தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடி அஜித் – ஷாலினி.  இவர்களைத் தொடர்ந்து   பிரபல ஜோடிகளாக பார்க்கப்படுபவர் சூர்யா – ஜோதிகா. சினிமாவில் சேர்ந்து நடிக்கும் பொழுது நல்ல நண்பர்களாக பழகினர் . காக்க காக்க படத்தின் போது இவர்களிடையே காதல் மலர்ந்தது.

அதன் பிறகு பெற்றோரிடம் சம்மதம் வாங்க பல வருடங்கள் காத்திருந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவருடைய திருமண புகைப்படம் எல்லாம் பெரிய அளவில் வைரலானது. தற்போது இவர்கள் இருவருக்கும் தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த ஜோடி குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

ஜோதிகா பெண் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க.. சூர்யா தொடர்ந்து வித்யாசமான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். தற்பொழுது கூட சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா கங்குவா என்னும் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திஷா பதானி மற்றும் பலர் நடித்து வருகின்றனர் படத்தின் படப்பிடிப்பு பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு  glimpse வீடியோ வெளியாகி வைரலானது மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் நடிகர் சூர்யா அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

இந்த புகைப்படத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் சூர்யாவின் மகள் தியா பார்ப்பதற்கு ஹீரோயின் போல் காட்சி அளிக்கிறார். இதை பார்த்த  தற்போது ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் சூர்யாவின் மகளை நீங்களே பாருங்கள்..

surya daughter
surya daughter
surya daughter
surya daughter

Leave a Comment