பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமான புதிய பிளாட் வாங்கிய சூர்யா.! பல வசதிகளுடன் இருப்பதாக தகவல்..

0
surya
surya

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மற்ற பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருபவர் தான் நடிகர் சூர்யா தற்பொழுது வரையிலும் நடிகர் சூர்யா ஐந்து பிசினஸ்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மாதம் பல கோடி சம்பாதித்து வரும் நிலையில் தற்போது அவர் பல கோடிக்கு புதிய பிளாட் ஒன்றை வாங்கி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவலை இன்னும் பட குழுவினர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் சூர்யா நடித்து வருவதாக கூறி சில புகைப்படங்கள் வெளியானது.

இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இதனைத் தொடர்ந்து சூர்யா பல முன்னணி இயக்குனர்களுடன் லைன் அப் வைத்துள்ளார். இவரை அடுத்து மறுபுறம் ஜோதிகா தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார்.

அதாவது சமீபத்தில் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடும்பத்துடன் குடியேறினார்கள் என்பது குறித்த தகவல் வெளியானது இதனை அடுத்து சூர்யா தற்போது மும்பையில் மீண்டும் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி உள்ளாராம் அந்த பிளாட்டின் விலை மட்டும் ரூபாய் 68 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை அடுத்து பிளாட் 9 ஆயிரம் சதுர அடி வர இருப்பதாகவும் அதில் கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சினிமாவையும் தாண்டி சூர்யா மற்ற பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருவதனால் தொடர்ந்து இவருடைய சொத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.