தனது அரசியல் பயணம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா.!! இதோ அவரே வெளியிட்ட தகவல்…

0

surya announced about politics: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நீண்டகலமாக ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் தற்போது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார், இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என சூர்யா பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய இந்த திரைப்படத்தில் இளம் வயது மாணவனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சூர்யாவின்சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் அதன் பிறகு அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி வருகின்ற நவம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சூர்யா தான் நடிக்கும் அடுத்த அடுத்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்தப் பேட்டியில் பல கேள்விகள் எழுப்பப் பட்டது அதற்கு சூர்யா பதிலளித்து வந்தார்.

மேலும் சூர்யாவிடம் அரசியலில் ஈடுபடுவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு சூர்யா அப்படி ஒரு நினைப்பு இல்லை எனக்கூறி அதிரடியாக அறிவித்தார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.