பிரபல இயக்குனருடன் கைகோர்த்த ‘சூர்யா 41’ நடிகை.!

0
surya-41
surya-41

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கடைக்கு வரும் சூர்யா தற்போது தனது 41வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தினை பாலா இயக்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ‘சூர்யா 41’ திரைப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வரும் நாயகி அடுத்ததாக பிரமாண்ட இயக்குனருடன் கைக்கோர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ‘சூர்யா 41’ திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.  மேலும் இவர் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் முதன்முறையாக தமிழில் ‘சூர்யா 41’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட  ரசிகர்கள் கீர்த்தி ஷெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். கீர்த்தி ஷெட்டி விஜய் சேதுபதி  வில்லனாக நடித்திருந்த தெலுங்கு திரைப்படமான உப்பனா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து லிங்குசாமியின் ‘தி வாரியர்’ என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றி திரைப்படமான மாநாடு திரைப் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்க இருக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் நேற்று ஒரு பாடல் பதிவும் விட்டதாகவும் கூறப்படுகிறது.