சூர்யா 40 : படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்கும் ஹீரோ.! இது கைகொடுக்கும் என நம்பியுள்ளார்.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று  படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில் சூர்யா 40 திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முன்பே வெளிவந்த நிலையில் தற்போது புதிய  தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் சூர்யா 40வது திரைப்படத்தில் வில்லனாக ஒரு ஹீரோவை களமிறங்கியுள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளது இதற்கு முன்பாக தளபதி 65 மற்றும் ரஜினியின் அண்ணா த்தா படத்தை தயாரித்து வருகிறது அதை தொடர்ந்தே சூர்யா 40 திரைப்படத்தையும் எடுக்க உள்ளது.

இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பாக டெக்னீஷியன்கள் தொடங்கி தொழில்நுட்பக்கலைஞர்கள் வரை எல்லாத்தையும் தட்டி தூக்கி உள்ளது அதுமட்டுமில்லாமல் டி இமான் இசையமைப்பாளராக சமீபத்தில் அறிவித்து.

மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கமீட் ஆகி யுள்ளார்.

பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய். இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக முதன்முதலாக நடிக்க உள்ளார்.

vinay
vinay

இவருடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சத்யராஜ் போன்றோரும் இதில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.