சூர்யா 40 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த படக்குழு.! மிரட்டும் வீடியோ.

0

சூரரை போற்று படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்குமென படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த போதிலிருந்து தற்போது வரையிலும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருந்தால் படத்திற்கான எதிர் பார்ப்பும் உச்சத்தை தொட்டது.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யராஜ் போன்றவர்கள் படத்தில் நடிப்பதால் இந்த படத்துக்கு கூடுதல் மேலும் நம்பிக்கையுடன் படக்குழு படத்தை எடுத்து வருகிறது.

மேலும் இந்த படத்திற்காக சூர்யா வேற ஒரு கேட்டப் போட்டு நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியன. அதனால் ரசிகர்கள் first look poster – ரை பார்க்க காத்து கிடந்தனர்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பாண்டிராஜ் ஆகியோர்கள் கலந்து பேசி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என அப்போதே அப்டேட் கூறியிருந்தனர். சொன்ன படி படக்குழு தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளது.

மேலும் சூர்யா நடிக்கும் 40 படத்திற்கு பெயரையும் வைத்தும் உள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்கு “எதற்கும் துணிந்தவன்” என டைட்டில் வைத்துள்ளது.

சூர்யா மிரட்டும் எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர் இதோ.