ஏசியன் பெயிண்ட் போல் முழு மேக்கப் போட்டுக்கொண்டு ரசிகர்களை கவர்ந்த சுருதிஹாசன்.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் 3 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதன்பிறகு விஜய்,விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா உடன் இணைந்து கிராக் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் இன்னும் சில நாட்களில் OTT வெளியாக வெளியாக உள்ளது. இவர் தற்போது நடிப்பையும் தாண்டி இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் சினிமாவில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது முழு மேக்கப் போட்டுக்கொண்டு தனது முன்னழகு தெரியும் படியும் தனது கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment