தமிழ் பொண்ணு லைக் அள்ளும் சுருதிஹாசன் அணிந்துள்ள மாஸ்க்.!ட்ரெண்ட்டாகும் புகைப்படம்.

0

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வருகிறது.அந்த வகையில் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன். இவர் சினிமாவில் அறிமுகமான சில காலகட்டத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கிராக் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப் படம் ரிலீசாவதற்கு தயாராகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பு திறமை மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், கமலஹாசன் போலவே சமூக பொறுப்பு உரிமை உடையவராகவும் திகழ்கிறார். ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தொடர்ந்து இவரும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். அந்த வகையில்  தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பலர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஸ்ருதிஹாசனும் தனது தனி ஸ்டைலில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சுருதிஹாசன் மாஸ்க் ஒன்றை உருவாக்கி அதில் தமிழ் பெண் என்ற கேப்ஷாக்வுடன் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சம் லைக்குகளை பெற்றுவிட்டது.அதுமட்டுமல்லாமல் சுருதிஹாசனின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை கூறி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.