கமலஹாசனின் மகளும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் இசையமைப்பாளர், பாடகி என பல பல திறமைகளை தமிழ் சினிமாவில் வெளி காட்டி வருகிறார். உலக நாயகன் கமலஹாசன் மற்றும் நடிகை சரிகாவின் மூத்த மகள் தான் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய தேவர் மகன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் தேவர் மகன் திரைப்படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை பாடியிருந்தார் இதனை தொடர்ந்து பல பாடல்களையும் பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டில் வெளியாகிய ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனுசுடன் 3, விஷாலுடன் பூஜை, விஜய்யுடன் புலி வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்தார்.
சிங்கம் மூன்றாவது பாகத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் கடைசியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் விஜய், சூர்யா, தனுஷ் என பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது அப்பா வயதுள்ள தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இவருக்கு வயது அதிகம் அதேபோல் சிரஞ்சீவி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சிரஞ்சீவியை விட சுருதிஹாசனுக்கு தான் இந்த திரைப்படத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது ஆனாலும் சுருதிஹாசன் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.