தனது செல்ல மகளுக்கு ஷகிலா கொடுத்த சர்ப்ரைஸ்.! மகிழ்ச்சியில் மிலா

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வந்த சிலருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளாக பங்குபெற்ற அஸ்வின், தர்ஷா குப்தா,கனி, பவித்ரா மற்றும் ஷகிலா உள்ளிட்ட இன்னும் பலரும்  ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் 2 சீசன் நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்தவகையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷகிலா.

இவரை பொதுவாக நாம் அனைவரும் கவர்ச்சி நடிகை என்பதை மட்டும் தான் நினைப்போம் அதையும் தாண்டி நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒரு நல்ல அம்மா என்ற அந்தஸ்துடன் ரசிகர்களின் மனதை மாற்றி உள்ளார். அந்தவகையில் ஷகிலா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் திருநங்கை பெண்ணொருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஷகிலாவின் மகளான மீலாவும் பிரபலமடைந்தார். அந்த வகையில் தற்போது ஷகிலா தனது மகளுக்கு பரிசாக ஐ பார்ட் அளித்துள்ளார். ஏனென்றால் மீலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100k பாலோசர்கள்  வந்துள்ளார்கலாம்.