சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தில் முதன்முதலில் தேர்வானது நான் தான் – நேர்காணலில் சூர்யாவுடன் சொன்ன பிரபல ஹீரோ.

எ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கஜினி. இந்த படம் 25 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நயன்தாரா, அசின், சத்தியன், ரியாஸ் கான், மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து  அசத்தி இருந்தனர்.

இந்த படம் வெற்றி அடைந்த பிறகு தான் நடிகர் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் அதிக ஆக்சன் திரைப்படங்கள் கிடைத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது வேறு சிலர் என கூறப்படுகிறது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

இந்த படத்தின் கதையை முதலில் எழுதிவிட்டு வேறு சில நடிகர்களை தேர்வு செய்துள்ளார் அந்த வகையில் மாதவன், அஜித் போன்றவர்களிடம் இந்த படத்தின் கதையை கூறி உள்ளார். சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். கடைசியாக நடிகர் சூர்யாவுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து போனதோடு மட்டுமல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க துணிந்தார்.

அவர் நினைத்தது போலவே இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மேலும் சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக கஜினி படம் இருக்கிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன்.

சூர்யாவுடன் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் நடித்த கஜினி படத்தின் வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது ஆனால் இரண்டாவது பாதியில் மொட்டை அடித்து நடிக்கும் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன் என கூறியுள்ளார்.

 

Leave a Comment