இப்போ என்னுடைய ரேஞ்சே வேற வில்லனாக நடிக்க மாட்டேன்.. வளர்த்துவிட்ட இயக்குனரிடம் சொன்ன சூர்யா

நடிகர்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களை அடுத்த லெவலுக்கு தூக்கி அழைத்து இயக்குனர்கள் தான்.. அதை ஒரு சில நடிகர்கள் வெளிப்படையாக சொல்வதும் உண்டு.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ சூர்யா முதலில் இவர் “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு சூர்யா நடித்த சில படங்கள்  தோல்வி, சுமாரான படமாக மாறியதால் அந்த காலத்தில் தடுமாறிக் கொண்டிருந்தார் இந்த நிலையில் தான் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் அவருக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை வைத்து பல ஹிட் படங்களையும் கொடுத்தார்.

அந்த வகையில் முதலாவதாக கே. வி. ஆனந்த சூர்யாவுடன் கைகோர்த்து அயன் என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதன்பிறகு தான் சூர்யாவின் மார்க்கெட் உயர்ந்தது.  பின் இருவரும் இணைந்து மாற்றான், காப்பான் ஆகிய அடுத்தடுத்த படங்கள் பண்ணினார் இந்த படங்களும் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.

அதன் பிறகு சூர்யாவுக்கு கே. வி. ஆனந்த ஒரு மாஸான கதையை எழுதி வைத்திருந்தாராம் ஆனால் திடீரென இறந்துவிட்டார். சூர்யாவை அடுத்த லெவலுக்கு உயர்த்தியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே வி ஆனந்த். இவர் நடிகர் சூர்யாவை பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அழகு பார்க்க திட்டம் போட்டார்.

முதலில் சூர்யாவை ஒரு ஹீரோவாக காட்டிவிட்டு பின் படங்களில் வில்லனாக காட்ட முடிவு செய்தார். ஆனாலும் அது நடக்காமலேயே போய்விட்டது. கே வி ஆனந்த் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் “கனா கண்டேன்” இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அணுகியது சூர்யாவிடம் தானாம் அப்பொழுது  பிதாமகன், பேரழகன் போன்ற படங்களில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்ததால் வில்லனாக நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்

Leave a Comment