சூரரைப் போற்று அதிரடி அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவருக்கு கடைசியாக வெளியாகிய திரைப்படம் காப்பான், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, ஆனாலும் சூர்யா  மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஏனென்றால் இதற்க்கு முன் வெளியாகிய திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது தான் காரணம்.

தற்பொழுது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு அப்டேட்டை ஜிவி பிரகாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தனது சமூக வலைத்தளத்தில்.

சூரரைப் போற்று டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் தற்போது தீம் மியூசிக் பணிகள் நடந்து வருவதாக ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இதனால் ரசிகர்கள் சூரரைப்போற்று படத்தின் அடுத்த ட்ரீட் ரெடி என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment