சூர்யாவின் சூரரைப்போற்று சென்சார் முடிந்தது.! என்ன சான்றிதழ் தெரியுமா.?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர்  தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை ‘துரோகம்’ ‘இருதி சுற்று’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா தான் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படம் ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதன் டீசர் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அதேபோல் சூரரைப்போற்று இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் சூர்யா ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றது, மேலும் சூரரைப்போற்று திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது இந்த பணிகள் எப்போது தொடங்கும் என உத்தரவாதம் இல்லாமல் நிலைமை நீடித்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தை சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது ஒருவேளை நிலைமையை இப்படியே நீடித்தால் மீண்டும் வேறொரு தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக இன்று வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர், இதனை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Leave a Comment