நன்றி மறந்த சூர்யா…? கழட்டிவிட்டவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடும் அருண் விஜய்.! ஏன் இப்படி நடந்து கொள்கிறார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா இவரை ரசிகர்க ளிடைய பிரபலம் அடைய வைத்தவர்களில்  ஒருவர் பாலா அதேபோல் இவரை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு காட்டியவர் கௌதம் வாசுதேவ் மேனன் அவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

அந்தந்த காலகட்த்திற்கு ஏற்ப இயக்குனர் பாலா, கௌதம் வாசுதேவ் மேனன் ஹரி  ஆகியோர்கள் சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்கள் சொல்லப்போனால் சூர்யாவை சினிமாவில் தூக்கிவிட்ட இயக்குனர்கள் என்று கூட கூறலாம் அதாவது சூர்யாவை இயக்கும் இயக்குனர்கள் எதாவது ஒரு திரைப்படம் சரிவை சந்தித்து விட்டால் அவர்களை புறக்கணித்து விடுவார் சூர்யா.

இந்த நிலையில் கௌதம் வாசுதேவன் மேனன்  சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டு இதுவரை சூர்யா கொடுக்கவே இல்லையாம் அதேபோல் சூர்யா நடிப்பில் அருவா திரைப்படத்தை தொடங்கினார் ஹரி ஆனால் சூர்யா மற்றும் ஹரி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு உதவியாக இருந்த ஒவ்வொரு இயக்குனர்களையும் கழட்டி விட்டு வருகிறார் சூர்யா.

அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் அந்த வகையில் மீண்டும் ஹிட் கொடுக்கும் வகையில் சூர்யா நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படத்தை பாலா இயக்கி வந்தார் ஆனால் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திரைப்படமும் கைவிடப்பட்டது.

திடீரென திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியதால் பாலாவின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தை எடுப்பதற்காக பலமுறை முயற்சி செய்தார் பாலா ஆனால் சூர்யா படம் பாதியிலே நின்றாலும் பரவாயில்லை என எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படி மிகப்பெரிய சினிமா கேரியரில் இருந்த பாலா வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

இந்த நிலையில் AL விஜய் ஏற்பாட்டில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இதற்கு முன்பு சூர்யாவினால் கைவிடப்பட்ட ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தில் அருண்விஜய் உதவியாக இருந்தார் தற்பொழுது அருண்விஜய்  சூர்யாவாள் விடப்பட்ட பாலாவிற்கு கை கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்தநிலையில் சூர்யாவாழ் கைவிடப்பட்ட  பல இயக்குனர்களுக்கு தற்பொழுது அருண் விஜய் தான் கை கொடுத்து வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment