சூர்யா சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் திரைப்படத்தை கொடுக்க வில்லை அதனால் எப்படியாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார், இந்த நிலையில் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது, இந்த திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்தப் பேட்டியில் சூர்யா தன்னுடைய படங்களை பற்றி பேசியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யா தான் நடிக்கும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் பற்றி தகவலைக் கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய 39வது திரைப்படம் நவரச என்ற ஆந்தாலஜி திரைப்படம் என்றும், அதனை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா தான் நடிக்கும் 3 திரைப்படத்தை அதிகாரபூர்வமாக பேட்டியில் அறிவித்துள்ளார் அதனால் இந்த மூன்று திரைப்படங்களை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரரைப்போற்று திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் கொண்டாடயிருக்கிறார்கள்.
https://twitter.com/Suriya_Trends/status/1322792625754136576?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1322792625754136576%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fsurya-confirms-his-next-three-movies-after-soorarai-potru-tamilfont-news-273069