அதிரடி ஆக்ஷன் இயக்குனருடன் இணையும் சூர்யா.? மீண்டும் மாஸ் கூட்டணி

0

சூர்யா தற்போது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், இவர் நடிப்பில் வெளியாகிய என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற பெரிய சந்தேகம் அனைவரிடமும் இருந்து வருகிறது, ஏனென்றால் சூர்யா சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது ஆனால் சிவா ரஜினியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

அதனால் சிவாவுடன் அடுத்த படம் இல்லை என்று தெரிந்து விட்டது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அனைவரிடமும் இருந்து வருகிறது அடுத்ததாக பாலாவின் இயக்கத்தில் சூர்யா கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அடுத்ததாக சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்தால் இந்த திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக தான் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.