சூர்யா நடிப்பில் வெளியாகிய வெற்றி மற்றும் தோல்வி திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.? இதோ முழு தகவல்..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர், இந்த நிலையில் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

இந்த நிலையில் சூரிய அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் அது மட்டுமில்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

இப்பொழுது சூர்யா தொடர்ந்து படங்களில் நடிக்க இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் விஜய் ,அஜித் ஆகியோர் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்போது முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சூர்யா. ஆனால் சமீபகாலமாக இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் திரைப்படங்கள் அமையாததால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் எதிர்பாராத விதமாக சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அது என்னென்ன திரைப்படங்கள் என்று இங்கே காணலாம்.

காதலே நிம்மதி, சந்திப்போமா, ஸ்ரீ, மாயாவி, ரத்த சரித்திரம், அஞ்சான்.

அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியாகிய ஹிட் படங்களை இங்கே காணலாம்.

நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, வேல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், சிங்கம்-2, 24. ஆகிய திரைப்படங்கள் சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படங்கள் ஆகும்.

Leave a Comment

Exit mobile version