இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் கலவைதான் அருவா.? அதிரடி தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

ஹரி இயக்கும் அருவா திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது, ஹரி இதற்குமுன் சூர்யாவுடன் ஐந்து திரைப்படங்களில் இணைந்துள்ளார், ஆறாவது முறையாக அருவா திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பாக கே ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் கே ஞானவேல் ராஜா அருவா படம் பற்றி பேசியுள்ளார், அவர் கூறியதாவது, அருவா திரைப்படம் அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படம், அதாவது வேல் மற்றும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் கலவை போல் அசத்தலாக உருவாக இருக்கிறது.

இந்தநிலையில் அருவா திரைப்படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த மாதம் துவங்கி ஒரே கட்ட படபிடுப்பாக படத்தை முடித்துவிட்டு வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். திரைப்படம் குடும்பத் திரைப்படம் என்பதால் மக்களிடம் பிரபலம் அடையும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment