இரும்புக்கை மாயாவி முதல் அருவா வரை.. பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சூர்யாவின் 5 திரைப்படங்கள்…!

suriya missed 4 movies : தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் ஆனால் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்ட திரைப்படங்களை இங்கே காணலாம்.

சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் திறமை கொண்டவர் இந்த நிலையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கராவின் புறநானூறு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என வரிசை கட்டி நிற்கிறது சூர்யாவின் திரைப்படங்கள்.

அந்த வகையில் சினிமாவில் நடிப்பதற்கு கமிட் ஆகிப் பிறகு ட்ராப்பான சூர்யாவின் திரைப்படங்களை காணலாம்.

துப்பறியும் ஆனந்தன்: கௌதமேனன் சூர்யா கூட்டணியில் டிடெக்டிவ் கதைய அம்சம் கொண்ட திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது அந்த திரைப்படத்திற்கு துப்பறியும் ஆனந்தன் என பெயர் வைத்திருந்தார்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது ஆனால் அந்த அறிவிப்போடு அந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது.

துருவ நட்சத்திரம்: கௌதமேனன் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த மற்றொரு திரைப்படம் துருவ நட்சத்திரம் இந்த திரைப்படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது அதன் பிறகு விக்ரமை வைத்து கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை எடுத்தார். என்னதான் விக்ரம் நடித்திருந்தாலும் இந்த கதையை முதன் முதலில் சூர்யா அவர்களிடம் தான் கௌதமேனன் கூறியுள்ளார் அதன் பிறகு சூர்யா அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் விக்ரம் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்பு கை மாயாவி: சூர்யாவின் கனவு திரைப்படங்களில் ஒன்று இரும்பு கை மாயாவி இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கி இருந்தார் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது அது மட்டும் இல்லாமல் போஸ்டர் கூட வெளியானது ஆனால் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருந்ததால் அந்த நேரத்தில் கிடப்பில் போடப்பட்டது ஆனால் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அந்த திரைப்படத்தை எடுத்தே தீர்வேன் என முடிவு செய்துள்ளார் விரைவில் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருவா: சூர்யா ஹரி கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் அருவா இந்த திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகிய வேல், ஆறு, சிங்கம், என அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் மீண்டும் ஆறாவது முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் இணைய இருந்தார்கள் 2019 ஆம் ஆண்டு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது அருவா திரைப்படம்.

வணங்கான்: பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வனங்கான் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு மாத சூட்டிங் முடிவடைந்த நிலையில் இந்த கதை தனக்கு செட்டாகவில்லை என சூர்யா அந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் அதன் பிறகு இந்த கதையை அருண் விஜய் அவர்களிடம் கூறி அவரை வைத்து தற்போது படத்தை இயக்கி வருகிறார் பாலா இந்த நிலையில் இந்த திரைப்படம் இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.