கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் ஆர்யா-சாயிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் காப்பான் இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் காப்பான் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது, இந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் சூர்யா உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள், அதுமட்டுமல்லாமல் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் லைகா நிறுவனம் காப்பான் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, காப்பன் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது லைக்கா நிறுவனம்.

