சூர்யாவின் காப்பான் தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
kaappaan 3
kaappaan 3

சூர்யா, சாயிஷா, ஆர்யா மோகன்லால் நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காப்பான், இந்த திரைப்படம் நேற்று பல திரையரங்குகளில் வெளியானது, அதேபோல் சூர்யாவின் திரை பயணத்தில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படமாக காப்பான் அமைந்துள்ளது.

ஆனால் முதல் இரண்டு காட்சிகள் மிகப்பெரிய ஓபனிங் அமையவில்லை, ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ்புல்லாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் காப்பான் திரைப்படத்திற்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது காப்பான் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளன, தமிழகத்தில் மட்டும் 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதற்கு முன் வெளியாகிய என் ஜி கே திரைப்படம் முதல் நாளில் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதுமட்டுமில்லாமல் அஞ்சான் திரைப்படம் 8.5 கோடி வரை முதல் நாள் வசூல் செய்தது, சூர்யாவின் திரை பயணத்தில் முதல் நாள் வசூலில் காப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.