ஏதாவது பண்டிகை என்றாலே பிரபலங்கள் பலரும் அதனை கொண்டாடி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள் அந்த வகையில் இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் சூர்யா மற்றும் ஜோதிகா பொங்கல் தினத்தை கோலாகலமாக கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் அந்தப் புகைப்படம் ரசிகர் களிடம் கலக்கி வருகிறது அதுமட்டுமில்லாமல் பொங்கல் தினத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி 3-வது சிங்கிள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து கொள்வார்கள். அதை எல்லாம் தாண்டி ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தான் திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் அஜித்-ஷாலினி, பிரசன்னா சினேகா, சூர்யா ஜோதிகா ஆகியோர் வர்களை றிக்கொண்டே செல்லலாம். அந்தவகையில் சூர்யா-ஜோதிகா ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் பின்பு இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் இருவரும் ஒரு காலகட்டத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்பொழுது சூர்யா மட்டும் ஜோதிகாவிற்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் வைத்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
