அஜித்தை போல் வக்கீலாக மிரட்டும் சூர்யா.! வைரலாகிறது ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர்.!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளன.

மேலும் சூர்யாவின் திரைப்படம் அறிவியல் சார்ந்த திரைப்படமாகவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாகவும் இருந்துவருகிறது. இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புது இயக்குனர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக், ஜெய்பீம் ஆகிய நான்கு திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படங்கள் அமேசான் நிறுவனத்தில் தான் வெளியாகும். அதன்படி ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் அமேசான் OTT இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று ஜோதிகா சசிகுமார் சமுத்திரகனி சூரி நடிப்பில் உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த படம்  மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது இந்த நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பெண்ணின் பிரச்சனைகளுக்காக போராடும் வழக்கறிஞராக களமிறங்கியுள்ளார்.

இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.