“கங்குவா” படத்திற்காக லுக்கை மாற்றிய சூர்யா – இணையதளத்தில் டிரெண்டாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அப்படி இவர் நடித்த ஜெய் பீம் சூரரை போற்று போன்ற சில படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக சூரரை போற்று திரைப்படம் பல தேசிய விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவிற்கே ஒரு அங்கீகாரம் கொடுத்தது. இதைத்தொடர்ந்து கடைசியாக சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுத் தராததால்..

அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க சிறந்த இயக்குனரை தேர்வு செய்து வந்த நிலையில் அவரது ஆஸ்தான இயக்குனர் பாலா உடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது ஒரு கட்டத்தில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் பல பிரச்சனைகள் ஏற்பட..

அந்த படம் பாதியிலே நிறுத்தப்பட்டது. தற்போது சூர்யா சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் போது சூர்யாவின் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகின.

அதைத் தொடர்ந்து தற்போது கங்குவா படத்திற்காக புதிய தோற்றத்தில் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. மேலும் சூரியா ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வருகின்றன.

Leave a Comment