தமிழ் சினிமாவில் சூர்யாவை ஆகா ஓகோ என உயர்த்திய சிறந்த 10 படங்கள்.!

Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது அயராத முயற்சியால் தான் தனக்கான இடத்தை பிடித்தார், அதேபோல் சூர்யா ஆரம்ப காலத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார், அப்படி தோல்வி திரைப்படங்களை கொடுத்த சூர்யாவை சினிமாவில் உயர்த்திய சில திரைப் படங்களை இங்கே காணலாம்.

1.பூவெல்லாம் கேட்டுப்பார் – சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான திரைப்படம். இந்த படத்தின் மூலம் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

2. மௌனம் பேசியதே – சூர்யா, லைலா, திரிஷா, என பல முன்னணி நடித்து அசத்தியுள்ள காதல் திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

3. நந்தா – பாலா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் சூர்யா மற்றும் ராஜ்கிரண் நடித்திருக்கும் ஓர் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த படத்தின் மூலம் சூர்யா தனக்கான இடத்தை பிடித்தார்.

4. காக்க காக்க – சூர்யா அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முதல் திரைப்படம். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான காதல் மற்றும் அதிரடித் திரைப்படம்  இந்த படம் சூர்யா திரைபயனத்தில் வெற்றி படமாக அமைந்தது.

5. பிதாமகன் – விக்ரம் சூர்யா என பல பிரபலங்கள் நடித்து அசத்தியுள்ளா திரைப்படம். இப்படத்தில் வரும் காட்சிகளை துல்லியமாக நடித்து துணை நடிகருக்கான விருது பெற்றுள்ளார் சூர்யா அவர்கள். அதுமட்டுமல்லாமல் திரைத்துறையில் சூர்யாவின் முதல் விருது ஆகும்.

6. கஜினி – முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் சூர்யா. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பிரபலமானது.

7. வாரணம் ஆயிரம் – கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் ஏழு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் சூர்யா.

8. அயன் – சூர்யா நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்பட்டார் நடிகர் சூர்யா.

9. சிங்கம் – ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்று பாகங்களை இயக்கியுள்ளார் ஹரி.

10. 24 – சூர்யா மூன்று வேடங்களில் நடித்து அசத்தி உள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அறிவியல் மற்றும் புனைவு திரைப்படமாகும்.

இந்த திரைபடங்கள் தான் சூர்யாவின் திரைபயனத்தில் மிக முக்கிய திரைப்படங்கள் ஆகும்.

Leave a Comment