மிரட்டலாக உருவாக இருக்கும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழு திரைப்படம்.? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.

Rolex suriya : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது.

அதேபோல் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ஆனாலும் கமலின் கதாபாத்திரம் தனித்தன்மை மிக்கதாக தெரிந்தது. இந்த அனைத்து கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் கடைசியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் அதாவது ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரமாக பேசப்பட்டது ரோலக்ஸ் கதாபாத்திரம் தான் இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார், அப்பொழுது தன்னுடைய அடுத்த திரைப்படத்தை பற்றி அவர்களிடம் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது தன்னுடைய அடுத்த படம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் ஒரு கதை சொன்னதாகவும் அதில் அடுத்ததாக நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.

சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கார இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

ஆனாலும் அதற்குள் சூர்யாவின் ரோலக்ஸ் திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது அதனால் கண்டிப்பாக ரோலக்ஸ் கதாபாத்திரம் முழு திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment