காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சூரி விசாரணை திரைப்படத்தில் அவருக்கு ஜோடி யார் தெரியுமா.?

கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் சூரி இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார்.குறிப்பாக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் நடிகர் சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் ஆம் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் சூரிய தற்போது விசாரணை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவர் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் எப்படி இருந்ததோ அதே போல்தான் இந்த திரைப்படமும் இருக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் இதில் சூரி காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக பல பிரபலங்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் சூரிக்கு ஜோடியாக இந்தி திரைப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று மட்டும் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ என்பவர்தான் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம்.

g.v

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு ஜோடியா என கூறி கமெண்ட் பதிவு செய்வது மட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கும் படம் சூப்பர் ஹிட்டாகி விடும் ஆனால் இந்தத் திரைப்படம் எப்படி இருக்குமோ என்பதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version