காட்டுக்குள் ஒர்க் அவுட் செய்து அசத்தும் நடிகர் சூரி – விட்டா விவேகம் அஜித்தையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல..

suri
suri

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியவர் நடிகர் சூரி. மீண்டும் டாப் ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன்.

ஆக்சன் கதையை கூறவே அந்த கதை அவருக்கு பிடித்துப்போக சூரி விடுதலை திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் இந்த படத்திற்காக உடலை ஃபிட்டாக வைத்துக் நடித்து வருகிறாராம் இந்த படத்தில் சூரி உடன் கை கோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.

விடுதலை படம் மிகப் பெரிய ஒரு நீளமான படம் என்பதால் அதை இரண்டு பாகங்களாக எடுக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார் முதல் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பாக காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

அதற்காக படக்குழு ரொம்பவே மெனக்கெட்டு உள்ளது. சூரி கான்ஸ்டபிளாக நடித்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக காடுகளில் கூட ஜிம் ஒர்க் அவுட் செய்து அசத்தி வருகிறாராம். இரண்டு கல்லை வைத்து அவர் செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் விவேகம் படத்தில் இப்படி மரத்தில் இருந்து ஒரு காட்சி வருவதுபோல விடுதலை படத்திற்காக நடிகர் சூரி இப்படி ஒர்க் அவுட் செய்வது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதோ நடிகர் சூரி வொர்க் அவுட் செய்து அசத்திய அந்த வீடியோ.