வெளிவந்த ப்ரமோ சுரேஷ் சக்கரவர்த்தியை பாசத்தால் அழவைத்த கேப்ரில்லா!! வைரலாகும் வீடியோ.

0

suresh chakrawarthy and gabriella crying promo video viral:பிக் பாஸ் சீசன் பனிரெண்டாவது நாள் இன்று விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அப்படி இன்று காலையில் வெளிவந்த ப்ரமோவின் அடிப்படையில் ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷ் எந்த ஒரு செயல்பாடிலும் அதிகமாக ஈடுபடவில்லை என கூறி கண்ணாடி ரூமுக்குள் அடைத்து விட்டனர்.

அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் கேப்ரில்லா, ரியோ மற்றும் வேல் முருகன் இவர்கள் மூவரையும் சுமப்பது யார் என கேள்வி எழுந்த நிலையில் ஆரி வேல் முருகனையும், பாலாஜி முருகதாஸ் ரியோவையும், சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரில்லாவையும் தூக்கினார்.

மேலும் ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியால் கேப்ரில்லாவை தூக்கமுடியாமல் வேர்த்து விறுவிறுத்து முதுகில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் வலியை உணர்ந்த கேப்ரில்லா வேண்டாம் நான் இறங்கிக் கொள்கிறேன் என கூறுகிறார்.

அதற்கு மறுத்து சுரேஷ் இறங்க வேண்டாம் என கூறுகிறார் ஆனால் கேப்ரில்லா இறங்கி விடுகிறார். அதன்பிறகு இருவரும் கட்டிப்பிடித்து அழுகின்றனர். சுரேஷ் சக்ரவர்த்தி தான் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்க இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.

எது எப்படியோ சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு கடுமையான போட்டியாளர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. இதோப்ரமோ அந்த வீடியோ.