இயக்குனர் பாலாவின் பிடியில் சிக்கி தவிக்கும் ஆர்.கே.சுரேஷ்.! என்ன கொடுமை இப்படி வச்சி செஞ்சிட்டாரு.

bala
bala

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை நேர்த்தியா எடுக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் பாலா. இவரது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் நடிப்பு வராமல் இருந்தாலும் இவரது படத்தில் நடித்து முடித்துவிட்டால் நடிப்பு தானாக வந்து விடும் அந்த அளவிற்கு அவரிடமிருந்து அந்த நடிப்பை வாங்க பாலா எந்த எல்லைக்கும் செல்வார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பின்னாட்களில் இவர் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். இவர் சேது என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் திரைப் படத்தில் விக்ரமை மாறுபட்ட நடிப்பில் நடிக்க வைத்து அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் விக்ரமை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார் பாலா இப்படத்தினை தொடர்ந்து அவர் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி ,தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படைப்புகளை வேறு யாரும் எடுக்க முடியாத அளவிற்கு எடுத்தார் பாலா. இவரது திரைப்படங்களில் நடிகர்கள் மேலும் தனது நடிப்பு திறமையை கற்றுக் கொண்டு தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குகின்றனர் அதற்கு பாலா ஒரு காரணம்.

அத்தகைய படங்களை தொடர்ந்து தற்போது ஜியோ ஜார்ஜ் நடிப்பில் ,மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற படத்தை தமிழில் ரீமேக் உருவாக்குகிறார் பாலா. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் அவர்கள் நடிக்க உள்ளார் இப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் அதற்காக தனது எனது உடம்பை ஏற்றி இறக்கியும்க்கும் வருகிறார் அந்த வகையில் 105 லிருந்து 79 தற்போது மாறி உள்ளார் பாலாவின் பிடியில் சிக்கிக்கொண்டால் இதுதான் நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இது ஆர்கே சுரேஷ் அவர்களும் உணர்ந்திருப்பார் இவர் இதற்கு முன்பாக பாலாவுடன் இணைந்து தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஆர்கே சுரேஷ் அவர்கள் இபடதிற்காக உடலை ஏற்றி இறக்கி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rk-suresh
rk-suresh