தனது செல்ல மகளை வெளி உலகத்திற்கு காட்டிய சுரேகா வாணி.! இதுல யார் அம்மா, மகளுன்னு தெரியலையே.. வைரலாகும் புகைப்படம்.

0

திரை உலகில் வெற்றி பெற வயது வித்தியாசம் தேவையில்லை நடிப்புத் திறமை இருந்தால் போதும் என்பதற்கு உதாரணம் சுரேகா வாணி. சினிமாவில் இவர் நடிக்க வரும் போது இவருக்கு வயது அதிகம் ஆனால் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டார்  அதிலிருந்து இவருக்கு ஏறுமுகம் தான் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல்,  மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. மேலும் விசுவாசம் திரைப்படத்திலும் இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

சமீபகாலமாக சித்தி மற்றும் அம்மா கேரக்டர்களில் சிறப்பாக நடிக்கும் நடிகைகளில் ஒருவராக சுரேகா வாணி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் சுரேஷ் தேஜா 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணமடைந்தார் இந்த தம்பதிக்கு “சுப்ரிதா” என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இவரை பெரும்பாலும் மீடியா உலகில் காட்டாமல் இருந்த சுரேகா வாணி தனது நாற்பதாவது வயது பிறந்தநாள் பார்ட்டியின் பொழுது தான் அவரது மகளை வெளி உலகுக்குக் காட்டினார் அப்பொழுது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிறந்தநாள் பார்ட்டியில் சுரேகா வாணி உடன் அவரது மகள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது அது தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது வெகுவிரைவிலேயே சுரேகா வாணியை போல இவரும் சினிமாவில் நடித்தால் கூட ஆச்சரியமில்லை இருவரும் பார்ப்பதற்கு அக்கா தங்கை போலவே தான் இருக்கிறார்கள் இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

surekha vani and daughter
surekha vani and daughter 44
surekha vani
surekha vani