சூரரை போற்று படம்.. ஆஸ்கார் லிஸ்ட் இணைய இதை செய்து இருக்கணுமாம்.? உண்மையை உடைத்த பார்த்திபன்

0

சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று இத்திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படமும் திரையரங்கில் வெளிவந்திருந்தால் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று இருக்கும் என படத்தை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வந்ததை நாம் பெரிதும் கேட்டுக் கொள்ளலாம்.  சில காரணங்களால் இது OTT தளத்தில் வெளியானது எது எப்படியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையிலே இத்திரைப்படம் ஆஸ்கர் லிஸ்டில் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளது.

இருப்பினும் பலரின் கேள்வி குறி என்னவென்றால் ஆஸ்கார் விருதுக்கு ஒரு படம் செல்ல வேண்டுமென்றால் அந்த திரைப்படம் திரையரங்கில் ஓடியிருக்க வேண்டும் ஆனால் நேரடியாக OTTதளத்தில்தான் வெளியிடப்பட்டது இப்படி இருக்க இந்த படம் எப்படி அனுப்பப்பட்டது.

சமீபகாலமாக பெரும்பாளான திரைப்படங்களில் திரையரங்கில் வெளியாமல் OTT தளத்தில் வெளியானது. அந்த படங்களையும்  ஆஸ்கார் லிஸ்டில் தற்போது இணைத்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்காருக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் அப்படி சூரரைப்போற்று படத்திற்கு முன்பாக பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் லிஸ்டில் இணைந்தது.

அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது அதாவது ஒரு படத்தை ஆஸ்கார் நாமினேஷன் லிஸ்ட் வரவைப்பதற்கே கிட்டத்தட்ட 3.5 கோடி செலவாகும் அப்பதான் நாம சந்திக்க இடம் பெறுமாம் அதன்பிறகு வெற்றி பெறுவது எல்லாம் லக் என குறிப்பிட்டுள்ளார்.

oscar
oscar

அப்படி பார்த்தால் சூரரைப்போற்று திரைப்படமும் இப்படித்தான் போயிருக்குமோ என பலரும் கருதி வருகின்றனர்.

எது எப்படியோ ஒரு விருதை வாங்க காசு தான் வேணும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

surya
surya