சூரரை போற்று படத்திலிருந்து செம்ம அப்டேட்.! சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் புத்தாண்டு.!விவரம் இதோ.

Surarai pottru movie latest update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் பூவெல்லாம் கேட்டுப்பார், உன்னை நினைத்து, காக்க காக்க, பேரழகன், கஜினி,ஆறு, வேல், அயன், பசங்க 2, சிங்கம் என்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து கொண்டார்.சூர்யா அவர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது அதுவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை குதுகலம் அடைய செய்து வருகிறார்.

ஆனால் சமிப காலமாக சூர்யா அவர்களால் வெற்றி படங்களை கொடுக்க முடியாத நிலையில் தற்போது அவர் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார் இப்படத்தை சுதா கோ பிரசாத் அவர்கள் இயக்கி உள்ளார். இப்படம் மே மாதம் வெளிவர இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன இதனால் இப்படமத்திற்கு  தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.சூரரைப் போற்று படத்தை ரசிகர் அல்லது சூரியா அவர்களும் மிக பெரிய எதிர்பார்ப்பில் எதிர் பார்த்து வருகிறார்.

surya
surya

இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் வேண்டுமென சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றன.இதனையடுத்து இப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளிவரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் உருவான கதை குறித்து மேக்கிங் வீடியோவை சன் டிவி தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment