சூரரை போற்று டீஸர் ரிலீஸ் தேதியை பகிர்ந்த படக்குழு.! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெற வில்லை அதனால் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டுமென இருக்கிறார்.

கடைசியாக சூர்யாவுக்கு வெளியாகிய திரைப்படம் காப்பான், இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரைப் போற்று, இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிக்கேத்த பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார், அதுமட்டுமல்லாமல் கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார், படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பிரபல ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியீட்டு டீசர் ரிலீஸ் தேதியை உறுதிபடுத்தியுள்ளது படக்குழு.

சூரரைப் போற்று படத்தின் டீசர் ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாகிறது, இதனை புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளார்கள் படக்குழு.

soorarai potru

Leave a Comment

Exit mobile version