ரஜினியுடன் “ப்ரியா” படத்தில் ஜோடி போட்டு நடித்த நடிகை அஸ்னா ஹமீத்.! இப்போ எப்படி இருகாங்க பாருங்கள்.

0

திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அந்த வகையில் தமிழ் தொடங்கி ஹிந்தி வரை பல்வேறு நடிகைகளுடன் நடித்து உள்ளார்.

1978 ல் வெளியான பிரியா என்ற திரைப்படத்தில் ஒரே சமயத்தில் இரண்டு நடிகைகளுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார். ஸ்ரீதேவி மற்றும் அஸ்னா ஹமீத் நடித்திருப்பார் இவர்களுடன் இணைந்து மேஜர் சுந்தரராஜன் தேங்காய் சீனிவாசன் போன்றோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியாகியது. அப்போது  நல்ல கலெக்ஷன் நீட்டிய நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு 1979-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜாவுக்கு இது ஐம்பதாவது படம் அதனால் சூப்பராக பாடலை அமைத்திருந்தார்.

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள என்னுயிர் நீதானே என்ற பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட்டடித்தது.  அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இது குறிப்பாக ரஜினி மற்றும் அஸ்னா ஹமீத்துக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

இருவரும் படங்களில் நடித்து வந்தாலும்  ஒரு கட்டத்தில் அஸ்னா ஹமீத்துக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் இருக்கிற இடம் தெரியாமல் போனார். பல வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி உள்ளது. இதோ அந்த நடிகையின் புகைப்படம்.

ashna hameed
ashna hameed