jailer : தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் நடிகர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தனது ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.
இப்போது கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இளம் இயக்குனர் நெல்சருடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பாக்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரஜினியுடன் இணைந்து மோகன் லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி படக்குழு நகர்ந்துள்ளது இப்படி ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளி வருகின்றன.
ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளிவந்து மிரட்டிய நிலையில் காவலா பாடல் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக மாறியது உடனே இரண்டாவது சிங்களான ஹுக்கும் பாடல் வெளிவந்த பட்டையை கிளப்பிய நிலையில் ரசிகர்கள் அடுத்தாக டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த நேரத்தில் ஜெயிலர் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது என்னவென்றால்.. ஜெயிலர் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் பண்ணும் என கணிக்கப்பட்டுள்ளது அதன்படி முதல் நாள் மட்டும் சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் அள்ள வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

