ஸ்டைல் என்றாலே ரஜினிதான் என்பதை மறுபடியும் நிருபித்த சூப்பர்ஸ்டார்.! வைரலாகும் புகைபடம்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி காந்த் இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துல்லாரம் நடிகர் ரஜினி. மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு 25 கோடி சம்பளம் பெற இருக்கிறாராம். ஜெயிலர் படம் முடிந்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலங்களாக சரிவர ஓடாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் மிகத் தீவிரமாக நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கி வருகிறார் ஏற்கனவே இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பீஸ்ட் திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் ஒரு பேன்னிந்திய திரைப்படமாக உருவாக்கி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிக்க மற்ற மாநில சூப்பர் ஸ்டார்களை களம் இறக்கி உள்ளார் நெல்சன் திலீப்குமார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் ரஜினியின் அரிய வகை புகைப்படங்கள் சமீப காலங்களாக வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது சட்டை எதுவும் இல்லாமல் சிகரெட் பிடித்துகொண்டு போஸ் கொடுத்துள்ள ரஜினியின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rajini
rajini

Leave a Comment