சூப்பர் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் தான் – பிரபல காமெடி நடிகருக்காக அந்த பழக்கத்தை பழகி கொண்ட ரஜினி.! வெளியே கசிந்த தகவல்.

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 40 வருடங்களாக சினிமா உலகில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து மக்களுக்கு விருது கொடுத்து வருகிறார்.

இவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து தனது 169 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் ரஜினி. ரஜினி சினிமா உலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி பலருக்கும் பிடித்துப்போன ஒரு பிரபலமாக இருக்கிறார்.

அவ்வாறு இருக்க காரணம் சினிமாவில் தனது ஸ்டைலில் போன்றவற்றை வெளிப்படுத்துவது நிஜவாழ்க்கையில் ஆண், பெண்களுக்கு மரியாதை கொடுப்பது எல்லோரிடமும் சகஜமாக பரவுவதால் இவருக்கும் பிடித்துப்போன வராக இருக்கிறார் மேலும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நடிகர்களில் ஒருவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் சினிமா ஆரம்பத்தில் சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இருந்தாலும் போகப்போக தன்னை நம்பி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்து தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார் ஒரு கட்டத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நபராக ரஜினி உருமாறினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் பிரபல காமெடியன்னும், வசனகர்த்தாவும் ஆகிய கிரேஸி மோகன்.

ஒரு தடவை ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் ரஜினியும் அவரை உள்ளே அழைத்து சாப்பிட வைத்து நல்ல உபசரிப்பு செய்து பின் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிரேஸி மோகன் ஒரு பையையும் அருகில் எடுத்துச் சென்றிருந்தார் அதை பார்த்த ரஜினி பையில் என்ன என கேட்டுள்ளார் அதற்கு நான் எங்கு சென்றாலும் இந்த பையை எடுத்துச் செல்வேன் அதில் வெற்றிலை பாக்கு இருக்கு என்றார்.

பின் ரஜினி போடுங்கள் என சொல்லி உள்ளார் ஆனால் கிரேஸி மோகன் ரஜினியின் வீட்டை சுத்தி பார்த்தபொழுது சுத்தமாக இருந்ததால் போட தயங்கினார். இதை உணர்ந்து கொண்ட ரஜினி உடனே பையிலிருந்து ஒரு வெற்றிலை பாக்கை எடுத்து வாயில் போட ஆரம்பித்துவிட்டார். தான் போட்டால் தான் கிரேசி மோகன் போடுவார் என்ற எண்ணத்தில் ரஜினி அப்பொழுது முதல் முறையாக பிரபல காமெடி நடிகராக அந்த பழக்கத்தை ஏற்றுக் கொண்டாராம்.

Leave a Comment