கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார் – டாப் 10 வரிசையில் மூன்று இடங்களைப் பிடித்த ரஜினி படம் .! மிரண்டு போய் நிற்கும் ஹீரோக்கள் .

0
rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மக்கள் பலருக்கும் பிடித்த ஃபேவரட் நாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் உடன் கை கொடுத்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குனர் நெல்சன் விஜயுடன் இணைந்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில்தான் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது இதனால் ரசிகர்கள் பலரும் அடுத்து ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார் அந்த படம் எப்படி இருக்கும் என்பதே பலரின் கேள்வி குறியாக இருக்கிறது. இதனால் நெல்சனும் ரஜினிகான கதையை மிக கவனமாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசியாக ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களின் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படமாக இருந்தது இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபகாலமாக நடிகர்களின் அதிகம் நேரடியாக ஓடிடி தளத்திலும் அல்லது முதலில் திரையரங்கில் வெளியிட்டாலும் பின்பு சில மாதங்கள் கழித்து ஓடிடி தளத்தில் ரிலீசாகும்.

அப்படி அண்ணாத்த  திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி சில மாதங்கள் கழித்து நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில்  வெளியாகியது. ஓடிடி தளத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகியது. அதன்பிறகு டாப் நடிகர்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகினாலும் அண்ணாத்த திரைப்படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் முதலிடத்தை வகித்தது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்கள் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களில் மூன்று இடத்தை அண்ணாத்த பிடித்துள்ளது. முதலிடத்தில் தமிழில் வெளியான அண்ணாத்த திரைப்படமும் இரண்டாவது இடத்தில் ஹிந்தியில் வெளியான அண்ணாத்த திரைப்படமும் ஒன்பதாவது இடத்தில் தெலுங்கில் வெளியான அண்ணாத்த திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஓடிடி தளத்தில் அண்ணாத்த திரைப்படம்தான் டிரெண்டிங்கில் உள்ளது இதனை ரஜினி ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.