அன்றே தல அஜித்துக்கு வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! எதற்காக தெரியுமா..?

0
ajith-rajini
ajith-rajini

தமிழ் சினிமாவில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் தல அஜித் இவ்வாறு அறிமுகமான இந்த திரைப்படம் இவருக்கு சரியான வெற்றியை கொடுக்காத காரணத்தினால் மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளாகிவிட்டார் அந்த வகையில் இனிமேல் சினிமாவே வேண்டாம் என முடிவு செய்துவிட்டார் தல அஜித்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நடிகர் அஜித்திற்கு சினிமாவில் எந்த ஒரு பின்பலமும் கிடையாது அந்த வகையில் தனக்கு பிடித்த பைக் ரேஸில் இனிமேல் கலந்து கொண்டு அவற்றில் நம் சாதனை படைக்கலாம் என முடிவு செய்தார் அந்த வகையில் ரேஸில் கலந்து கொண்டு தீவிரமாக விளையாடிய நிலையில் அவருக்கு ஆசை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அஜித் அப்பொழுது இதெல்லாம் நமக்கு செட் ஆக மாட்டேங்குது என்று இயக்குனரிடம் கூறியிருந்தார் ஆனால் இயக்குனர் இந்த கதை மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அடித்து சொல்லி மிகப் பெரிய வெற்றியை தல அஜித்திற்கு கொடுத்துவிட்டார்.

மேலும் அதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களாக அமைந்திருந்தாலும் ஒரு திரைப்படம் வெற்றியும் ஒரு திரைப்படம் தோல்வியையும் மாறி மாறி சந்தித்து வந்தது இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருந்தார்.

அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும் நானும் அந்த நிலையில் இருந்து தான் வந்திருந்தேன் என்று பல்வேறு அறிவுறுகளை அவருக்கு கூரியது மட்டும் இல்லாமல் தான் நடித்த பில்லா திரைப்படத்தில் தல அஜித்தை நடிக்க கூறி வற்புறுத்தி உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அஜித்திடம் எப்பொழுதும் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படத்தில் மட்டுமே நீ நடிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பேட்டிகளில் பொது நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அஜித்துக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இவ்வாறு அஜித்துக்கு கூறிய அந்த அறிவுரைகளை 90களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஃபாலோ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது தல அஜித்தும் ரஜினி சொன்னதை அப்படியே கேட்டு நடந்து வருகிறார்.