பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது இளமை குறையும் வரை மட்டும்தான் முன்னணி நடிகையாக வலம் வர முடியும். ஆனால் நடிகர்கள் அப்படி கிடையாது அறுபது வயதானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அந்த வகையில் இருவர்கள் அன்று முதல் இன்று வரையிலும் முன்னணி நடிகர்களாக ஜொலித்து வருகிறார்.
அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தான் இன்று வரையிலும் திரை உலகில் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர்கள் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள் எனவே வெகுநாட்களாக அண்ணாத்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போதுதான் இத்திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களோடு இன்னும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தை இயக்குனர் சிவா தான் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்திற்கு சஹெப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று பலர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தனது fiat காரை பற்றி கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது fiat காருடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
