சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சூர்யாவின் “ஜெய் பீம்” போன்ற படங்களை ஏன் பாராட்ட மாட்டேங்கிறார் தெரியுமா.? வெளிவரும் உண்மை.

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  திரையுலகில் 40 ஆண்டுகளாக நடித்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சிறப்பான வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் நடிக்க பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டுள்ளார் வெகுவிரைவிலேயே நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இது இப்படி இருக்க பல்வேறு சிறந்த படங்கள் திரையுலகில் வெளிவருகின்றன அதைப் பார்த்துவிட்டு நடிகர்களையும் படக்குழுவையும் மிகவும் பாராட்டியிருக்கிறார் ரஜினி. அண்மையில் கூட மாநாடு, ராக்கி கடைசியாக கூட 83 ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதில் நடித்த நடிகர்களையும் படக்குழுவையும் புகழ்ந்து பாராட்டினார்.

இது இப்படி இருக்க தமிழ் சினிமாவிலேயே இன்னும் நிறைய படங்கள் மக்கள் மனதில் வென்று உள்ளன. அந்த படங்களை ஏன் பாராட்டவில்லை என கூறுகிறார் அதிலும் குறிப்பாக ஜெய் பீம், பரியேறும் பெருமாள் ஆகிய படங்களை ஏன் இதுவரை பாராட்டவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்ப அதற்கும் பதில் கிடைத்துள்ளது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி சிறந்த படங்களை பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதே சமயம் சாதி சம்பந்தப்பட்ட படங்கள் அண்மைகாலமாக வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் சில பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறது. இப்பொழுது ரஜினி அந்த படத்தை பாராட்டினால் அது இன்னும் ஜாதி அடிப்படையில் கொழுந்துவிட்டு எரியும்.

என்பதை உணர்ந்து கொண்டு  அதுபோன்ற படங்களை பாராட்ட விரும்புவதில்லை சினிமா உலகில் இது நடக்கின்ற ஒன்றுதான் அதற்காக உண்மையான பிரச்சனைகளை எடுத்துரைக்கும் சில சாதி சம்பந்தப்பட்ட படங்கள் வெளிவந்து அதை மக்களுக்கு புரிய வைப்பதும் ஒரு முக்கியமே..