தல திருமணத்தில் கெத்தாக கலந்து கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி.!இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

வெள்ளித்திரையில் தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல் தனது இயல்பான உதவி செய்யும் மனதை வைத்து ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருபவர் தல அஜித்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்களில் இருந்து தற்போது வரை நடித்து வரும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திரையரங்கம் இடிந்து விழுந்துவிடும் என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் அலப்பறை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் வருகின்ற மே 1ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும்படியாக திடீரென்று பர்ஸ்ட் லுக் வெளியாகாது என தகவலை படக்குழு சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார்கள் இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மனம் உருகிப் போய் விட்டார்கள்.

மேலும் தல அஜித்தின் திருமண வாழ்க்கையில் தனது உடன் நடித்து வந்த ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

ajith 5
ajith 5

தல அஜித்தின் திருமணத்தின் பொழுது சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தல அஜித்தின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Leave a Comment