தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களுக்கும் மேலாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசித்து உள்ளன.
காரணம் ரசிகர்கள் மக்கள் எந்த மாதிரியான படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டு நடிப்பதால் அவர் இப்போதும் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருகிறார். அண்மையில் கூட இவர் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் சுமாரான வெற்றியைத் தான் பெற்று தந்தது ஏனென்றால் ரஜினிக்கு ஒரு படம் மிகப்பெரிய 300 கோடியை தாண்டி வசூல் அள்ளும் ஆனால் இந்த திரைப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் தான் அது என தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் இந்தப் படத்தை சிறப்பாக கொடுக்க தற்போது திட்டமிட்டுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் 169 வது படத்தை பிரம்மாண்ட படமாக கொடுக்க பல்வேறு இளம் மற்றும் முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். இருப்பினும் அது அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. இந்த நிலையில் தான் சமீபகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கதை கேட்டுள்ளார் அந்த கதையும் ரஜினிக்கு திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ரஜினி ஒரு ஒன்லைன் கதை ஒன்றை சொல்லி உள்ளார். இந்த கதையை விரிவுபடுத்தி நெல்சன் ஒரு கதையை உருவாக்கி உள்ளார். அந்த கதையில் தான் தற்போது ரஜினிக்கு பிடித்துப்போகவே தற்பொழுது 169 வது திரைப்படம் உருவாக இருக்கிறது இதில் தான் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.