லாஸ்லியாவின் ஃப்ரண்ட்ஷிப் படத்தில் இருந்து சிம்பு பாடிய மாஸ் பாடல் இதோ.!

0
friendship video
friendship video

பிரண்ட்ஷிப் திரைப்படத்தை இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த திரைப்படத்தை சேன்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமா ஸ்டுடியோ சார்பாக ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் டிஎம். உதயகுமார் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெருமைகளைக் கூறும் இந்த பாடலை நடிகர் சிம்பு அவர்கள் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரஜினிகாந்த் மற்றும் சிம்பு அவர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்று வலம்  வருகிறது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.